இலங்கையில் ஜனவரி இறுதி வரை நிலச்சரிவு ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை!

இலங்கையில் 2026 ஜனவரி வரை மழையுடன் கூடிய வானிலை தொடரும் நிலைமை காணப்படுவதாக யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் புவியியல் துறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த காலப் பகுதிகளில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் அவர்  வலியுறுத்தியுள்ளார்.

டித்வா புயலின்போது நாட்டிற்குக் கிடைத்த அதிகளவிலான மழை காரணமாக மத்திய மலைநாட்டின் நிலக் கட்டமைப்பு உறுதியற்ற நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலப் பரப்பானது, வழமையான நிலைமைக்குத் திரும்பும் சூழல் தற்போதைய காலப் பகுதிக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.