மழை நின்றாலும் நிலச்சரிவு, வெள்ள அபாயம் தொடர்வதாக அறிவிப்பு!

தொடரும் மழை நிலைமை: சில பகுதிகளுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை - ஐபிசி  தமிழ்

புயல் இலங்கையை விட்டு நகர்ந்துள்ளது. இன்று மழை நின்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அனார்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இருந்தாலும் கெலனி ஆற்றின் நீர் மட்டம் கொழும்பு புறநகர்ப் பகுதிகளுக்கு இன்னும் பெரும் வெள்ள அபாய எச்சரிக்கை ஏற்படும் அளவுக்கே இருக்கிறது. நேற்று மத்திய மாகாணத்தில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.

மழை நின்றுவிட்டாலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மலைச் சரிவுகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் நிலம் நிலையற்றதாக இருக்கிறது. பதுளை மாவட்டத்துடன் கண்டியிலும் அதிகளவான இறப்புகள் பதிவாகியுள்ளன. மீட்புப் பணியில் இருப்பவர்களிடமிருந்து இன்று தகவல்கள் பெறப்படும் எண்பதால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

முன்னதாக, இலங்கை முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை ஜனாதிபதி ஊடக இயக்குநர் ஜெனரல் பிரசன்னா பெரேரா தெரிவித்தார்.

இலங்கையில் பேரிடர் சூழல் நிலவுவதால் இக்காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை பராமரிக்கும் பொருட்டு அவசர நிலையை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.