காணி உரிமை வழங்கப்பட வேண்டும் : அட்டன்  பேருந்து நிலைய வளாகத்தில் கையெழுத்து போராட்டம்

566334953 1526434118360924 4929193591631924128 n காணி உரிமை வழங்கப்பட வேண்டும் : அட்டன்  பேருந்து நிலைய வளாகத்தில் கையெழுத்து போராட்டம்

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள், அரச ஊழியர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் உட்பட காணியை பெறுவதற்கு தகுதி உடைய அனைவருக்கும் காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அட்டன்  பேருந்து நிலைய வளாகத்தில் கையெழுத்து வேட்டை நடைபெற்றது.

உரிமை மீட்போம், தலைமுறை காப்போம் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற  இந்நிகழ்வில்  அமைப்பின் தலைவர் பா. சிவநேசன் உட்பட பல சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்றிருந்தனர். “பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு நிலம் மற்றும் வீடுகளை வழங்குவது மிகவும் அவசியமானது. இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் முன்னேறும். கையெழுத்து திரட்டப்பட்ட பின் மனு ஜனாதபதியிடம் கையளிக்கப்படும்.” என்று அமைப்பின்தலைவர் பா. சிவநேசன் தெரிவித்தார்.