கிளிநொச்சியில் சந்திரன் பூங்காவுக்கு சொந்தமான காணி இராணுவத்தினரால் அளவீடு

கிளிநொச்சி டிப்போ சந்திப் பகுதியில் உள்ள சந்திரன்  பூங்காவுக்கு சொந்தமான காணியை இராணுவத்தினர் இன்று (24) அளவீடு செய்த போது பொதுமக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

குறித்த காணி நேற்றும் இராணுவத்தினரால் அளவீடு செய்யப்பட்டுள்ளது.

காணி நகரத்தின் முக்கிய தேவைகளுக்கு காணிகள் தேவைப்படுகின்ற போதும் படையினர் காணியை நீண்ட காலமாக வைத்துள்ளதுடன் அந்த காணியை அளவீடு செய்து சுவீகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.