கொத்தலாவலை பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு- கிழக்குப் பல்கலைக் கழகத்தில் போராட்டம்  

241 Views

பல்கலைக்கழகம் கொத்தலாவலை பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு- கிழக்குப் பல்கலைக் கழகத்தில் போராட்டம்  

கொத்தலாவல பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்  கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று நடைபெற்றுள்ளது.

இலவச கல்வியை பாதுகாத்தல், கல்வி இராணுவ மயப்படுத்தலை தவிர்த்தல் எனும் தொனிப் பொருளில் வந்தாறு மூலையில் அமைந்துள்ள பிரதான வளாக முன்றலில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

பல்கலைக்கழக தொழிற் சங்க கூட்டுக் குழு, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் என்பவற்றின் வழிகாட்டலில் இக்கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் என்பவற்றின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டு பல்வேறு சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி அமைதியான முறையில் கோவிட் தொற்று சுகாதார வழிமுறைகளைப் பேணி கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கத்தது.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply