வெளிநாடுகளுக்குச் செல்லும்போது எமது நாட்டுத் தலைவர்கள் எமது பாரம்பரிய அடையாளத்தைப் பிரதிபலிக்கும் தேசிய ஆடையை அணிய வேண்டும்என கொட்டபிட்டிய ராகுல தேரர் அறிவுறை வழங்கியுள்ளார்.
தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டின் தேசிய ஆடைக்கு வழங்க வேண்டிய கௌரவத்தைக் குறைத்துவிட்டதாக அவர் விமர்சித்துள்ளார்.
கடந்த காலங்களில் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் வெளிநாட்டுப் பயணங்களின் போது எப்போதும் எமது கலாசார உடையில் சென்றதை நினைவுகூர்ந்த தேரர், அதன் மூலமே அவருக்கு உலக அரங்கில் தனி மரியாதையும் ஈர்ப்பும் கிடைத்ததாகச் சுட்டிக்காட்டினார்.
எமது நாட்டின் பெறுமதியான பழக்கவழக்கங்கள் திட்டமிட்டு சீரழிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும், எமது கலாசாரம் மற்றும் தேசிய அடையாளங்களைப் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.



