“கிவுல்” ஓயா திட்டத்திற்கு எதிரான எழுச்சிப் பேரணி!

Unknown 1 "கிவுல்" ஓயா திட்டத்திற்கு எதிரான எழுச்சிப் பேரணி!

தமிழர் தாயத்தில் தமிழ் மக்களின் இனப்பரம்பலை சிதைக்கும் வகையில், மகாவலி அதிகாரசபையின் L வலயத் திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படும் “கிவுல் ஓயா” திட்டத்திற்கு எதிரான எதிர்ப்புப் பேரணியானது, இன்றைய தினம் வவுனியா வடக்கு – நெடுங்கேணியில் மக்கள் பேராதரவுடன் எழுச்சியாக நடைபெற்றது.

Unknown 2 "கிவுல்" ஓயா திட்டத்திற்கு எதிரான எழுச்சிப் பேரணி!

தமிழ்த்தேசியக் கட்சிகள்,சிவில் ம்ப்புகள்,​ஒருங்கிணைப்பிலும் ஏற்பாட்டிலும் இடம்பெற்ற இப்பேரணி, நெடுங்கேணி பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி வவுனியா வடக்கு பிரதேச செயலகம் வரை சென்றடைந்தது.

Unknown 3 "கிவுல்" ஓயா திட்டத்திற்கு எதிரான எழுச்சிப் பேரணி!

இப்​பேரணியில் கலந்துகொண்டவர்கள் “கிவுல் ஓயா திட்டம் வேண்டாம்” என்பதை வலியுறுத்தும் கோஷங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு கோஷங்களோ ஆர்ப்பாட்டப் பேரணியில் உணர்வுப்பூர்வமாகப் பங்கேற்றனர்.

Unknown 5 "கிவுல்" ஓயா திட்டத்திற்கு எதிரான எழுச்சிப் பேரணி!

இதன்போது ​இத்திட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தி ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றையும் வவுனியா வடக்கு பிரதேச செயலரிடம் கையளித்தனர்.

Unknown 6 "கிவுல்" ஓயா திட்டத்திற்கு எதிரான எழுச்சிப் பேரணி!

​இப்பேரணியில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர் இதில் சிவஞானம் சிறீதரன், துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், இராசமாணிக்கம் சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான M.A சுமந்திரன்,,சுரேஸ் பிரேமச்சந்திரன், மற்றும் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் பல அரசியல் பிரமுகர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.