கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் பாராளுமன்ற குழுக்கள் ஊடாக கலந்துரையாடி இணக்கப்பாடொன்றை எட்டியதன் பின்னர் அவ்விடயம் குறித்து வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் சார்ந்த நீரியல் வளங்களுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து ஆராயும் கூட்டம் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கே.டி.லால் காந்த தலைமையில் வியாழக்கிழமை (12) வவுனியாவில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் மக்களின் பல பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதும் கிவுல் ஓயா திட்டம் மற்றும் அதனுடனான சிக்கல்கள் குறித்து கலந்துரையாடப்படவில்லை. நேரம் போதாத காரணத்தால் இந்த விடயம் குறித்து அவதானம் செலுத்தப்படவில்லை என்று குறிப்பிடப்படுகிறது. பாராளுமன்ற குழுக்கள் ஊடாக கிவுல்ஓயா திட்டம் குறித்து ஒரு இணக்கப்பாட்டை எட்டி அதனை அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.



