கிளிநொச்சி மாவட்டத்தின் சிறுவர் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தின் 2 ஆம் காலாண்டுக்கான சிறுவர் அபிவிருத்திக்குழு கலந்துரையாடல் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்டச் செயலாளர் திருமதி.றூ.கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

வைரஸ் தொற்றுக்காலப்பகுதியில் சிறுவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் என்பன பாடசாலை ஆரம்பித்த பின் இடம்பெறவேண்டும்.

மாணவர்களின் வரவு ஒழுங்கின்மை, இடைவிலகல், தனியார்கல்வி நிலையங்களின் அடிப்படைவசதிகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகள், கர்ப்பவதிகளுக்கான போசாக்கு பொதி விநியோக மேற்பார்வை நடவடிக்கைகள், சிறுவர்கழக செயற்பாடுகளை முன்னெடுப்பதன் ஊடாக சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கான வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

கிராமமட்ட சிறுவர் அபிவிருத்திக்குழு செயற்பாடுகளை முன்னெடுப்பதன் ஊடாக சிறுவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை இனங்கண்டு சிறுவர்களை பாதுகாத்தல். சட்டரீதியற்ற கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை காரணமாக ஏற்படும் குடும்ப வன்முறைகள், இதனால் சிறுவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், சுகாதார பாதுகாப்பிற்காக அரசசார்பற்ற நிறவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் மேம்பாட்டிற்காக மாவட்டத்தின் துறைசார்ந்த உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் ஊடாக குறிப்பாக சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள், கிராமமட்ட அமைப்புகளை வலுப்படுத்தல் சட்டரீதியற்ற செயற்பாடுகளுக்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்ற தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.