கூட்டு எதிர்க்கட்சிகளின் அரச எதிர்ப்பு பேரணி இன்று…

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நுகேகொடை நகரில் இடம்பெறவுள்ளது.

ஐ.தே.க.வுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பிவிதுரு ஹெல உருமய,  ஸ்ரீலங்கா மகாஜன கட்சி, ஜனதா சேவக கட்சி, நவ ஜனதா பெரமுன உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இன்றை அரச எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கவுள்ளன.

எனினும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் திலித் ஜயவீரவின் எங்கள் மக்கள் சக்தி கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் இன்றைய பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளன. மூன்று பிரதான விடயங்களை வலியுறுத்தி இந்த பேரணி இடம்பெறவுள்ளது.

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அடக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டும் என என்ற தொனிப்பொருட்களின் கீழ் இந்த பேரணி இடம்பெறவுள்ளது.