இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஜப்பான் உதவி

இலங்கையில் சமூக பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக ஜப்பான் 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

“நெருக்கடியில் பெண்களை மேம்படுத்துதல்” என்ற திட்டத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் பிரிவு ஊடாக ஜப்பான் அரசாங்கம் இந்த மனிதாபிமான உதவியை வழங்கியுள்ளது.