இன்று தமிழகம் சென்ற யாழ். இளைஞர்கள் இருவர் மீது வழக்கு தொடர நடவடிக்கை

375 Views

தமிழகம் சென்ற யாழ். இளைஞர்கள்

தமிழகம் சென்ற யாழ். இளைஞர்கள்

இன்றைய தினம் அதிகாலை தமிழகத்தை சென்றடைந்திருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் மீது வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் இன்று (28) அதிகாலை தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரையில் கரையிறங்கியிருந்தனர்.

இவ்வாறு தமிழகம் சென்ற இரு இளைஞர்கள் மீதும் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளமையால், அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அகதிகளாக தமிழகத்திற்கு தஞ்சம் கோரி வந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்திருந்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது குறித்த இருவருக்கும் எதிராக இலங்கை நீதிமன்றில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இருவரையும் மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கவில்லை. அவர்கள் மீது சட்டவிரோதமாக இந்தியாவுக்குள், கடவுச்சீட்டு இன்றி ஊடுருவியதாக தேவிபட்டினம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இருவரும் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் குருநகர் பகுதியை சேர்ந்த சீலன, அருள்ராஜ் என்பதும் தெரியவந்துள்ளது.

Tamil News

Leave a Reply