பொன்னாலை சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்ட கட்டளை தளபதியிடம் விளக்கம் கோரியுள்ள மனிதஉரிமைகள் ஆணைக்குழு

ponnalai e1629267398235 பொன்னாலை சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்ட கட்டளை தளபதியிடம் விளக்கம் கோரியுள்ள மனிதஉரிமைகள் ஆணைக்குழு

பொன்னாலை சம்பவம் தொடர்பாக இராணுவத்தின் யாழ்ப்பாண மாவட்ட கட்டளை தளபதியிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் கே.கனகராஜ் தெரிவித்துள்ளார். 

கடந்த 15 ஆம் திகதி இரவு பொன்னாலை பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்பினுள் இராணுவத்தினர் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக அப்பகுதி மக்களால் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கும் தொடரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள்  ஆணைக்குழுவின் சொந்தப் பிரேரணையாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு மேற்படி விளக்கம் கோரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதன் பிரதி யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கும்  அனுப்பப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

ilakku-weekly-epaper-143-august-15-2021