யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் தமிழகத்தில் தஞ்சம்

கடல் வழியாக தமிழகத்திற்கு சென்றுள்ளனர்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் இருவர் இன்று அதிகாலை தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கடல் வழியாக தமிழகத்திற்கு சென்றுள்ளனர்.

ஜெயசீலன் சீலன் மற்றும் வினோத் அருள்ராஜ் ஆகிய இரு இளைஞர்களும் குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவரின் மீன்பிடி படகை எடுத்துக்கொண்டு தமிழகத்திற்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் இன்று (28) அதிகாலை ராமநாதபுரம் தொண்டி கடற்கரை பகுதியில் கரையிறங்கியுள்ளனர். இதனையடுத்து தமிழக கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணகைள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இவர்கள் இருவரும் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் 22ம் திகதியில் இருந்து இன்று வரை 77 இலங்கை தமிழர்கள் இவ்வாறு அகதிகளாக தமிழகத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil News