யாழ்ப்பாணப் பண்பாட்டு மையம் இன்று திறப்பு – பிரதமர் மோடி திறந்து வைத்த பின்பே மக்கள் பாவனைக்கு அனுமதி

260 Views

யாழ்ப்பாணப் பண்பாட்டு மையம் இன்று திறப்பு

யாழ்ப்பாணப் பண்பாட்டு மையம் இன்று திறப்பு

இந்திய நிதி உதவியில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பண்பாட்டு மையம் இன்று திறந்து வைக்கப்பட உள்ள நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த பின்னரே பொதுமக்கள் பாவனைக்கு  அனுப்பப்படும் என தெரியவந்துள்ளது.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைதந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச இணைந்து இன்று (28) நண்பகல் 12.30 மணிக்கு காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக யாழ்ப்பாணப் பண்பாட்டு மையத்தினை திறந்துவைக்க உள்ளனர்.
இந்திய நிதி உதவியில் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட குறித்த யாழ்ப்பாணப் பண்பாட்டு மையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்ற நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக கலந்து கொண்டு திறந்து வைக்கும் வகையில் அதன் திறப்புவிழா தள்ளிப்போடப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 30ம் திகதி பலாலி விமான நிலையம் ஊடாக வருகைதந்து யாழ்ப்பாணப் பண்பாட்டு மையத்தினை திறந்துவைப்பார் என்ற தகவல்கள் வெளிவந்திருந்த நிலையில் அது இறுதிவரை இந்திய தரப்பால் உறுதி செய்யப்பட்டிருக்கவில்லை.
இதையடுத்தே இலங்கைக்கு வருகைதந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பில் இன்று திறந்துவைப்பதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இன்று திறந்துவைக்கப்படும் யாழ்ப்பாணப் பண்பாட்டு மையம் பிறிதொரு சந்தரப்பத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பில் திறந்து வைக்கப்பட்ட பின்னரே பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply