இலங்கையின் இன அழிப்பிலிருந்து சிறுவர்கள், பெண்கள் உட்பட அனைவரையும் பாதுகாப்பது உலகின் கடமை-முகிலினி

“எமது தாயகத்தின் இருப்பையும் எமது மக்களின் அரசியல் உரிமைகளையும் உறுதிபடுத்தி இலங்கையின் இன அழிப்பிலிருந்து சிறுவர்கள், பெண்கள் உட்பட அனைவரையும் பாதுகாப்பது உலகின் கடமை” என முள்ளிவாய்க்கால் சாட்சியான முகிலினி தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தீவில் தமிழர் தேசத்தின் தொன்மையும் தொடர்ச்சியான இருப்பும் அரசியல்  உரிமையும்’என்னும் கருப்பொருளில்   கடந்த 15ம் திகதி  தமிழீழ போராட்ட வரலாற்றில் இணைந்திருக்கின்ற  மூன்று தலைமுறை பிரதிநிதிகளின் நெறிப்படுத்தலில் பிரித்தானியாவில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றுகையில் முகிலினி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.