இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்

273 Views

இலங்கையில் இந்த வருடத்திலேயே அதிகளவிலான எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பதுளை மாவட்ட வைத்தியசாலையின் பாலியல் நோய்கள், HIV தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

“மேலும் நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 3500 எயிட்ஸ் (AIDS) நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 77 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

பதுளை மாவட்டத்தில்  இதுவரையான காலப்பகுதியில் 40 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,  எல்லவில் மாத்திரம் 25 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது  அடையாளம் காணப்படும் எயிட்ஸ் நோயாளர்களுக்கு வெலிசர கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது” என  பதுளை மாவட்ட வைத்தியசாலையின் பாலியல் நோய்கள், HIV தடுப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply