டென்மார்க்கின் நிர்வாகத்தின் கீழ் சுயாட்சி அலகாக இயங்கும் கிறீன்லாந்தை அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது படையி னரை அனுப்பி கைப்பற்று வது என்பது இயலாத காரியம் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித் துள்ளது.
ஐரோப்பிய நாடுகளின் இறைமை மதிக்கப்பட வேண்டும். இது ஒரு ஆபத்தே தவிர நடை முறைச் சாத்தியமற்றது. எனவே இது தொடர்பில் நாம் அதிகம் பேசத் தேவையில்லை. எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாது காப்பை உறுதி செய்வதற்கான நடைமுறைகள் எம்மிடம் உண்டு.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடு ஒன்று தாக்கப்பட்டால் அதனை பாதுகாப்பதற்கான சரத்து 42-7 நடைமுறைப்படுத் தப்படும். அதாவது ஏனைய ஐரோப்பிய நாடுகள் பதில் தாக்குதலை மேற் கொள்ளவேண்டும். இவை எல்லாம் செய்திகள் தான் என ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் போலா பின்கோ தெரிவித்துள்ளார்.
எனினும் கிறீன்லாந்தையும், பனாமா கால்வாயையும் தேவையேற்பட்டால் படை பலத்தை பயன்படுத்தி கைப்பற்றுவேன்,அவை அமெரிக்காவின் பாதுகாப்புக்கு தேவையானவை என கடந்த செவ்வாய்க்கிழமை(7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
டென்மார்கின் ஆளுமையில் உள்ள உலகின் மிகப்பெரும் தீவான கிறீன்லாந்தில் தங்கம், யுரேனியம் போன் கனிமப்பொருட்களும், எண்ணைவளமும் உள்ளன. டொனால்ட் ட்ரம்ப்பின் மகன் இந்த வாரம் கிறீன்லாந்திற்கு பயணம் மேற்கொண்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.



