பௌத்த பாரம்பரியத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததியிடம் கையளிக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் – ஜனாதிபதி வலியுறுத்தல்

‘நடைமுறைச் சட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச் செல்ல முடியாது’ என்றும் ‘நாட்டின் பாரம்பரியம் மிக முக்கியமான அம்சமாகும்’ என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். ‘பெளத்த மதத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பட்ட பாரம்பரியத்தின் ஊடாக சிறப்புக்குரிய பணியை இலங்கை ஆற்றியிருக்கிறது’.

‘அந்த பாரம்பரியத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததிகளிடம் பாதுகாப்பாக கையளிக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்’ என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ‘பௌத்த மத பாரம்பரியத்தை பாதுகாப்பதன் ஊடாக சமூக மலர்ச்சியை ஏற்படுத்தலாம்’ என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதற்கான மத நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் சமூகத்தின் மலர்ச்சியை மேலும் வலுப்படுத்தலாம்’ என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது தெரிவித்ததாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.