இஸ்ரேல் தாக்குதலால் ‘அமில மழை’ : ஈரானிய செம்பிறை அமைப்பு எச்சரிக்கை

ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் “பல எரிபொருள் சேமிப்பு வளாகங்களை” தாங்கள் தாக்கியதை இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் உறுதிபடுத்தியுள்ளன. அங்கு தற்போதும் தீப்பற்றி எரிந்து வருகிறது. இந்த தீயால் அமில மழை பெய்யலாம் என ஈரானிய செம்பிறை அமைப்பு தெரிவித்துள்ளது.

செம்பிறை அமைப்பின் அறிக்கையை மேற்கோள்காட்டி பிபிசி பாரசீக மொழி சேவை வெளியிட்டுள்ள செய்தியின்படி, “எண்ணெய் சேமிப்பு வசதிகள் ஏற்பட்டுள்ள வெடிப்பு, காற்று மற்றும் மேகங்களில் அதிக அளவிலான நச்சு ஹைட்ரோகார்பன்ஸ், சல்ஃபர் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகளை வெளியிட்டுள்ளது. மழை பெய்தால், வலுவான அமில பண்புகள் மிகவும் ஆபத்தானதாகலாம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அமில மழை தோல் எரிச்சல் மற்றும் நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தலாம்,” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமில மழையில் நனைந்தால் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.

எந்த வேலையும் இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும் முடிந்தவரையில் வீட்டிற்குள்ளே இருக்குமாறும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.