நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுனாமி ஆழிப்பேரலை நினைவேந்தல் !

ஆழிப்பேரலை சுனாமியின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல் | Sri Lanka News | Ada  Derana | Truth First

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 21 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு இன்றையதினம் நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல்கள் இடம்பெற்றன.

சுனாமி பேரழிவு மற்றும் பிற பேரிடர்களில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், காலை 9.25 மணி முதல் காலை 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவில், நாட்டில் 35,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5000 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனார்கள். பல பில்லியன் கணக்கான மதிப்புள்ள சொத்துக்களும் அழிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.