சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியோர் நீண்ட ஆயுள் மற்றும் உயிரி தொழில்நுட்பம் பற்றிய அரிய உத்தியோகபூர்வமற்ற உரையாடலைப் பகிர்ந்து கொள் ளும் நேரடி மைக்ரோஃபோன் ஒலி வடிவம் கசிந்துள்ளது.
புதன்கிழமை(3), புதினும் கிம்மும் பெய்ஜிங்கில் ஜியுடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரில் ஏகாதிபத்திய ஜப்பானின் தோல்வி யின் 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் இராணுவ அணி வகுப்பைக் காண அவர்கள் தியானன்மென் வாயிலுக்கு நடந்து சென்றபோது இந்த உரையாடல் நடந் தது. அவர்களின் கருத்துப்பரிமாற்றம் சுருக்க மாக இருந்தாலும் அது உடனடியாகவே சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. பின்னர் ஒளிபரப்பிலிருந்து ஒரு கிளிப்பை ப்ளூம்பெர்க் ஊடகம் வெளியிட்டிருந்தது.
“இந்த நாட்கள் 70 வயதை எட்டுவது” இனி அசாதாரணமானது அல்ல என்று ஜி மாண்டரின் மொழியில் கூறியதுடன் அந்த உரையாடல் ஆரம்பமாகியது. “முன்பு மக்கள் அரிதாகவே 70 வயது வரை வாழ்ந்தார்கள், ஆனால் இந்த நாட்களில் 70 வயதில் நீங்கள் இன்னும் ஒரு குழந்தை.” “உயிரியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், மனித உறுப்புகளை தொடர்ந்து இடமாற்றம் செய்ய முடியும், மேலும் மக்கள் இளமையாக வாழ முடியும், மேலும் அழியாமையை கூட அடைய முடியும்,” என ரஷ்ய அதிபர் பதிலளித்திருந்தார்.
“இந்த நூற்றாண்டில், 150 வயது வரை வாழ்வதற்கான வாய்ப்பும் உள்ளது.” என்று ஜி கூறி முடித்ததும் கேமரா துண்டிக்கப்பட்டது. அதுவரை அவர்கள் கமரோ செயற்படுகின்றது என்பதை அறியாது பேசியிருந்தனர். ஜி மற்றும் புதின் இருவருக்கும் 72 வயது, அதே நேரத்தில் கிம்மிற்கு 41 வயது.
பின்னர் ரஷ்ய நிருபர்கள் இது குறித்து கேட்டபோது புடின் உரையாடலை உறுதிப் படுத்தினார். உறுப்புகளை மாற்றுவதற்கான அறுவை சிகிச்சை உட்பட நவீன மருத்துவ முன்னேற்றங்கள், ஆயுட்காலம் கணிசமாக அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புகளை உருவாக்கு கின்றன. அத்தகைய மாற்றங்கள் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார விளைவுகளை” ஏற்படுத்தும் என்று தெரிவித்திருந்தார்.



