இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தூண்களில் ஒருவரும், இந்திய விளையாட்டுத் துறையை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்று அதன் மூலம் இந்தியாவிற்கும் தனியார் நிறு வனங்களுக்கும் நிதியை சேர்க்கும் திட்டத்தைக் கொண்ட கோ கோ (Kho Kho) என்ற நிறுவனத்தின் தலை வருமான சுதன்ஷு மிட்டல் என் பவரை அண்மையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனும், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலமும் கூட்ட டாக சென்று இரகசியமாக சந்தித்த புகைப்படங்கள் கசிந்துள்ளன.
இலக்கு ஊடகத்திற்கு பிரத் யேகமாக கிடைத்த இந்த புகைப் படங்களை வழங்கியவர்கள், இந்த சந்திப்புக்களை அவுஸ்திரேலியா வில் உள்ள தமிழ் காங்கிரஸ் என்ற அமைப்பே இரகசியமாக ஒழுங்கு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதனை உறுதிப்படுத்தும் முகமாக, இது தொடர்பில் அவுஸ்திரேலிய காங்கிரஸ் அமைப்புடன் இலக்கு ஊடகம் தொடர்புகளை மேற்கொள்ள முயற்சிகளை செய்து வருகின்றது.
கடந்த தசாப்தத்தில், இந்திய கோ கோ கூட்டமைப்பின் நிறுவனம் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அதன் விளையாட்டு நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதன் தடம் இப்போது இந்தியா முழுவதும் 680 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவியுள்ளது, உலகளாவிய ரீதியில் ஆறு கண்டங்களிலும் 55 க்கும் மேற்பட்ட நாடுகளில் விரிவடைந்துள்ளது.
அண்மையில் இலங்கை அரச தலைவர் அனுர திஸ்ஸநாயக்க யாழ் மண்டைதீவு பகுதி யில் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தை அமைக்கும் பணிகளுக்கான ஆரம்பத்தை மேற் கொண்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள் ளது. மேலும் மண்டைதீவுப் பகுதியில் 200 ஏக்கர் காணிகளை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாங்கி குவித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.