இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்!

ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து வளைகுடா நாடுகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களால் பஹ்ரைனில் தான் அதிக அளவிலான மக்கள் காயமடைந்துள்ளனர்.

பஹ்ரைன் மீது நடத்தப்பட்ட  தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட 32 பேர் காயமடைந்ததாக அந்த நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 2 மாத குழந்தையும் அடங்கும்.

வளைகுடா நாடுகளில் தற்போது வரை 10 பேர் உயிரிழந்துள்ளனர், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சௌதி அரேபியாவில் புதிய தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.

முக்கிய எண்ணெய் வயலை நோக்கிச் சென்ற டிரோன்களை இடைமறித்து அழித்ததாக சௌதி அரேபியா தெரிவித்துள்ளது. முன்னதாக ஒரு  ஆளில்லா விமானம் அமெரிக்கா தூதரகத்தை தாக்கியிருந்தது.

தங்களின் நிலைகள் மீதான இஸ்ரேலிய-அமெரிக்க தாக்குதல்கள் தொடர்ந்தால் பிராந்திய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல்கள் விரிவுபடுத்தப்படும் என ஈரானிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.