அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏமாற்றுவதாக குற்றம் சாட்டிய ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அணுசக்தி பேச்சுவார்த்தைகள் சொத்து பரிவர்த்தனைகள் போல நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
“கடினமாக அணுசக்தி விவாதங்கள் சொத்துக்கள் வாங்குவதும் விற்பதும் போல நடத்தப்படுவதும், பெரிய பொய்கள் உண்மையை மறைப்பதும், யதார்த்தத்துக்கு மிகவும் தொலைவில் உள்ள எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாது,” என தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முடிவு பேச்சுவார்த்தை மேசையின் மீது கோபத்துடன் குண்டு வீசுவது போன்றது ஆகும் எனக் கூறும் அவர், ட்ரம்ப் ராஜதந்திரத்துக்கும் அவரைத் தேர்வு செய்த அமெரிக்கர்களுக்கும் துரோகம் இழைத்துள்ளார் என்றும் தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை அன்று ஈரான் பேச்சுவார்த்தை நடத்த விரும்பியதாகக் கூறிய ட்ரம்ப், அதற்கு ‘மிகவும் தாமதமாகிவிட்டது’ என்றும் தெரிவித்தார்.
ட்ரம்பின் கருத்தைத் தொடர்ந்து பேசிய ஈரானின் பாதுகாப்பு தலைவர் அலி லரிஜானி “நாங்கள் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்.” என்று கூறினார்.



