குருக்கள்மடம் பகுதியில் மனிதப்புதைகுழிகள் இருக்கக்கூடிய ஏனைய சாத்தியமான இடங்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் மூன்று நாட்களாக அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அங்கு மனித எச்சங்களோ அல்லது வேறு தடயங்களோ கண்டறியப்படாமையினால் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட பகுதி மீண்டும் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



