முல்லைத்தீவு – மாங்குளம் நகர்ப் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட மனித என்புக்கூடு தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
காணியில் மனித என்புக்கூடு கிடப்பதாக பொதுமகன் ஒருவர் காவல்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து குறித்த பகுதிக்கு காவல்துறைனர் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த இடத்தை குற்றப் பிரதேசமாக அடையாளப்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, நேற்று (05) காலை குறித்த இடத்திற்கு வருகை தந்த தடயவியல் பொலிஸார் குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.