சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று அடுத்த வருட ஆரம்பத்தில் நாட்டிற்கு வருகைத்தரவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மதிப்பாய்வு குறித்து விவாதிப்பதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மதிப்பாய்வு ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், அதனை அங்கீகரிப்பதற்காக அந்த நிர்வாகக் குழு கடந்த 15ஆம் திகதியன்று வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும், விரைவான நிதியுதவிக்கான இலங்கையின் கோரிக்கையைத் தொடர்ந்து அதனை ஒத்திவைக்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.



