இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை சர்வதேச நாணயநிதியம் ஆரம்பிக்கவுள்ளது-கெரி ரைஸ்

இலங்கையுடன் பேச்சுவார்த்தை

இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான திட்டமொன்று குறித்து இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை சர்வதேச நாணய நிதியம் ஆரம்பிக்கவுள்ளது என அதன் பேச்சாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நுண்பொருளாதார ஸ்திரத்தன்மையை மீண்டும் ஏற்படுத்துவதற்கும்,கடன் ஸ்திரதன்மையை உறுதி செய்வதற்கும் வலுவூட்டப்பட்ட சமூகப்பாதுகாப்பின் மூலம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களை பாதுகாப்பதற்கும் நம்பகதன்மை மிக்க ஒத்திசைவான மூலோபாயத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கை தொடர்பான அனைத்து சாத்தியப்பாடுகள் குறித்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என ரைஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியம் சமீபத்தில் இலங்கையுடனான தனது கலந்தாலோசனைகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு நாணய இருப்பினை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக சந்தையால் தீர்மானிக்கப்பட்ட நெகிழ்வான நாணயமாற்று வீதத்தை பின்பற்ற வேண்டும் என அதன் நிறைவேற்று சபை தெரிவித்துள்ளது.