ஈரான் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதீப் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதிபர் மசூத் பெசெஷ்கியன் “இந்த கோழைத்தனமான படுகொலை ஈரானை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது” என தெரிவித்துள்ளார். முன்னதாக, இஸ்மாயில் கதீப் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக, புதன்கிழமை இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
ஈரானின் உயர் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி மற்றும் துணை இராணுவமான பசிஜ் படையின் தலைவர் கோலாமரேஸா சொலைமானி ஆகியோர் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்த மறுநாள் இந்த தகவல் வந்துள்ளது.
பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கிய முதல் நாளில் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் தலைமையை பலவீனப்படுத்தும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் முயற்சியில் ஈரானிய மூத்த அதிகாரிகள் மற்றும் தளபதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.



