இந்தோனேசியா: மீள்குடியமர்த்த கோரி போராட்டம் நடத்திய ஆப்கான் அகதிகள்

போராட்டம் நடத்திய ஆப்கான் அகதிகள்

போராட்டம் நடத்திய ஆப்கான் அகதிகள்: இந்தோனேசியாவின் Pekanbaru நகரத்தில் உள்ள இந்தோனேசிய சட்ட மற்றும் மனித உரிமைகள் அமைச்சக அலுவலகத்தின் எதிரே தங்களை மீள்குடியமர்த்தக் கோரி அமைதி வழி போராட்டத்தை ஆப்கான் அகதிகள் நடத்தியிருக்கின்றனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான ஆப்கான் அகதிகள் தங்களை வேறொரு நாட்டில் நிரந்தரமாகமீள்குடியமர்த்தக்கோரி கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இந்தோனேசியாவில் சுமார் 14 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட அகதிகள் இருக்கின்றனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆப்கானிஸ்தானில் தாலிபானால் தாக்குதலுக்கு உள்ளாகும் ஹசாரா இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பலர்      அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக தஞ்சமடைய இந்தோனேசியா வந்தவர்கள் எனப்படுகின்றது.