இந்தியாவின் அதி சக்திவாய்ந்த விமானந்தாங்கி “விக்ராந்த்” கப்பல் இலங்கை வருகை

இந்தியாவின் முதல் தாயகத்திலே தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கி கப்பலான INS Vikrant (ஐ.என்.எஸ். விக்ராந்த்) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்து நங்கூரமிடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை 75ஆம் ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்படும் சர்வதேச கடற்படை அணிவகுப்பு (International Fleet Review) நிகழ்வில் பங்கேற்க விக்ராந்த் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகைதந்துள்ளது.

2022ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட INS Vikrant, 45,000 தொன் எடையுடையது. மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட இது, பன்முக போர் விமானங்கள், ஹெலிக்கொப்டர்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை தாங்கியுள்ள இந்தியாவின் முக்கியமான கடற்படை சொத்தாக கருதப்படுகிறது.

இந்திய கடற்படை வரலாற்றில் புதிய சக்தியின் அடையாளமாகக் கருதப்படும் INS Vikrant, முழுமையாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதலாவது விமானந்தாங்கி கப்பலாகும். 2022 செப்டம்பர் 2 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட விக்ராந்த், இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு மற்றும் தொழில்நுட்ப திறன் ஆகியவற்றை உலகிற்கு நிரூபித்த முக்கியமான சாதனையாகப் பாராட்டப்படுகிறது.