இலங்கை வந்தடைந்தது இந்திய நிவாரண உதவி விமானம்

இலங்கை ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக இரண்டாவது இந்திய நிவாரண உதவி விமானம் இலங்கை வந்தடைந்தது.

நிவாரணப் பொருட்கள், மீட்பு உபகரணங்கள் மற்றும் இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 82 பணியாளர்களைக் கொண்ட நிவாரணக் குழு அடங்கிய இந்திய விமானப்படையின் IL-76 விமானம் (29) இன்று காலை சுமார் 07.55 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது,

இதில் இந்த குழுவுடன் 04 பயிற்சி பெற்ற மோப்பநாய்களும் அடங்கும். நிவாரண உதவிகளை ஒப்படைக்கும் நிகழ்வில் இந்திய விமானப்படையின் 8ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரவீன் குமார் திவாரி உட்பட இந்திய விமானப்படை அதிகாரிகள் குழுவும், இலங்கை விமானப்படையின் தலைமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர மற்றும் விமானப்படை அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டனர்.