இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை இரவு ஜெருசலேமில் உள்ள இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். ஒக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அவர் இரங்கல் தெரிவித்தார்.
ஹமாஸ் தாக்குதலை ஒரு ‘பயங்கரவாத’ செயல் என்று வர்ணித்த பிரதமர் மோடி, “இந்திய மக்கள் அதன் வலியைப் புரிந்துகொள்கிறார்கள். பொதுமக்களைக் கொல்வதை யாரும் நியாயப்படுத்த முடியாது” என்றார்.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு முன்பாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றினார். பிரதமர் மோடியை “நண்பரை விட மேலானவர், அவர் ஒரு சகோதரர்” என்று அவர் வர்ணித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். டெல் அவிவ் சென்றடைந்ததும், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவரது மனைவி சாராவுடன் சென்று விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர்.



