இலங்கை உட்பட்ட அண்டை நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்திருப்பது மோசமான நிர்வாகத்திற்குச் சான்றாகும் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் (Ajit doval) தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பிற நாடுகளில் அரசியலமைப்பு சாராத முறைகள் மூலம் ஆட்சிகள் மாற்றப்பட்டன.
அவை, உண்மையில் மோசமான நிர்வாகத்தின் நிகழ்வுகளாகவே இருந்ததாக அஜித் டோவல் குறிப்பிட்டுள்ளார். “தேசத்தைக் கட்டியெழுப்பும் செயல்முறையிலும், ஒரு தேசத்தைப் பாதுகாப்பதிலும், அதன் இலக்குகள் மற்றும் அபிலாஷைகளை அடைய உதவுவதிலும் ஆளுமை முக்கியப் பங்கு வகிக்கிறது என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.



