இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு திங்கட்கிழமை (15) கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தமை குறித்து நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கருத்தில்,
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை நேற்று கொழும்பில் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவுடனான எங்கள் நீண்டகால நட்பையும், வலுவான இருதரப்பு உறவுகளையும் பொதுஜன பெரமுன பெரிதும் மதிக்கிறது. இந்தப் பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்த நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.