இலங்கை வந்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்  இன்று இலங்கைக்கு பயணம் செய்துள்ளார்.

எஸ். ஜெய்சங்கருடன் வெளிநாட்டலுவல்கள் துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் நான்கு பேரும் வருகைதந்துள்ளனர்.

இந்த குழுவினர் மாலைதீவில் இருந்து இந்தியாவிற்கு சொந்தமான சிறப்பு விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.