இலங்கை பெற்றோருக்கு, இந்தியாவில் பிறந்து வளர்ந்து, 34 ஆண்டுகளுக்குப் பிறகு ‘நாடற்றவர்’ என்று அறிவிக்கப்பட்ட ஒருவர், நீதிக்கோரி சென்னை மேல் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்தநிலையில், இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் குறித்த மனுதாரருக்கு எதிராக கட்டாய நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் உத்தரவை நீதிபதி எம்.தண்டபாணி பிறப்பித்துள்ளார். அத்துடன் அவரின் குடியுரிமை விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை அறிவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ராமாபுரத்தைச் சேர்ந்த ஆர்.பாஹிசன், என்பவரே ஆட்சியர் அலுவலகத்தால் ‘நாடற்றவர்’ என்று முத்திரை குத்தப்பட்டுள்ளார்.
அத்துடன், இந்திய கடவுச்சீட்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பலவற்றை வைத்திருந்தாலும் திருச்சியில் உள்ள ஒரு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்படும் அச்சுறுத்தலை அவர் எதிர்கொள்கிறார்.
இந்தநிலையிலேயே அவர் நீதிகோரி சென்னை நீதிமன்றை நாடியுள்ளார்.