இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி இலங்கை பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இருநாள் உத்தியோகபூர்வ வருகையின் போது, அவர் இலங்கை இராணுவத் தளபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட உயர்தர தலைவர்களோடு சந்தித்து பன்முக பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
பாதுகாப்பு பயிற்சி ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிராந்திய பாதுகாப்பு போன்ற இருதரப்பு பணிகளில் கலந்துரையாடல்கள் நடைபெறும்.
இந்த விஜயம், இந்தியா – இலங்கை பாதுகாப்பு மற்றும் இராணுவத் திறன் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.



