விமானப்படை தளபதி எயா மார்ஷல் சுதர்ஷன பத்திரணவின் அழைப்புக்கமைய, இந்திய விமானப்படைத் தளபதி எயா சீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரி உள்ளிட்ட நால்வர் அடங்கிய தூதுக்குழு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு பயணம் வந்துள்ளனர்.
பிராந்தியங்களுக்கிடையிலான சமுத்திர கண்காணிப்பு நடவடிக்கைகள், கூட்டுப்பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து இலங்கையின் உயர்மட்ட குழுவினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக இந்திய விமானப்படைத் தளபதி எயா சீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரி இலங்கைக்கு 5 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதற்காக திங்கட்கிழமை (1) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.