சீனாவை எதிகொள்ள இந்தியாவுக்கு பல பத்து ஆண்டுகள் எடுக்கும் – சீனா அதிகாரி

களமுனையில் சீனாவை எதிர்கொள்வதற்கான தகுதி தற்போது இந்தியாவிடம் இல்லை எனவும் அதனை இந்தியா எட்டுவதற்கு பல பத்து ஆண்டுகள் செல்லும் எனவும் கடந்த வாரம் சிங்கப்பூரில் இடம்பெற்ற IISS Shangri-La Dialogue எனப்படும் ஆசிய பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட சீன படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் தற்போதைய படைத்துறை உற்பத்தியும், நவீனமயப்படுத்துல்களும், சீனாவை எதிர்கொள்ள போதுமானதல்ல என சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டபோதும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளருடன் கைகுலுக்குவதை தவிர்த்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாய்வான் விவகாரம் தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையில் விரிசல்கள் ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா இந்தியாவை பயன்படுத்த முற்பட்டு வருகின்றது.

எதிர்வரும் 22 ஆம் நாள் இந்திய பிரதமர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்வதற்கு அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் கடந்த வாரம் இந்தியா வந்திருந்தார்.