மக்களுக்கு  உதவி செய்வதில் இந்திய பிரதமர் ஆர்வமாக உள்ளார்-அமைச்சர் எல் முருகன் கருத்து

இலங்கை மக்களின் பிரச்சினைகள், சுமைகளை குறைப்பதில் இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்தார்.

யாழ்  பொது நூலகத்தில் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும்  உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தொடர்ந்தும் பல துன்பங்களை  சந்தித்து வருகின்றது. அவ்வாறான நிலையில், மக்களுக்கு  உதவி செய்வதில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆர்வமாக உள்ளார். அதன் வெளிப்பாடுதான் இந்த உதவிகளை செய்கின்றோம் இது மட்டுமன்றி பல்வேறு வகையான அபிவிருத்திகள் இடம்பெற்றுவருகிறது.

இந்திய அரசின் நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும்  நிகழ்வில் கலந்துகொள்வதற்காக  யாழ்ப்பாணத்துக்கு நேற்று (09) வருகை தந்துள்ள நிலையில் இந்த உதவி திட்டம் வழங்கப்பட்டது