இலங்கையின் இயற்கை விவசாய முயற்சிகளிற்கு ஆதரவு அளித்து இந்தியாவால் உரம் வழங்கி வைப்பு

151 Views

இலங்கையின் இயற்கை விவசாய முயற்சிகளிற்கு ஆதரவு

இலங்கை அரசாங்கத்தின் இயற்கை விவசாய முயற்சிகளிற்கு ஆதரவளிப்பதற்காக  இந்தியா  நானோ நைட்டிரஜன் உரங்களை அனுப்பி வைத்துள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரலாயம் தெரிவித்துள்ளது.

இது குறித்துமேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து, இலங்கையின் இயற்கை விவசாய முயற்சிகளிற்கு ஆதரவு தெரிவித்து இன்று அதிகாலை இந்திய விமானப்படையின் இரு விமானங்கள் நானோ நைட்டிரஜன் உரங்களுடன் இலங்கை வந்தடைந்தன.

இந்திய விமானப்படையின் சி17 குளோப்மாஸ்டர் விமானங்கள் 100,000நானோ நைட்டிரஜன் உரங்களுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தன.

இலங்கை அரசாங்கத்தின் இயற்கை விவசாய முயற்சிகளிற்கு ஆதரவளிப்பதற்காகவும் இலங்கை விவசாயிகளிற்கு நானோ நைட்டிரஜன் உரங்கள் கிடைப்பதை துரிதப்படுத்துவதுமே இதன் நோக்கம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply