இந்திய,இலங்கைக்கு இடையிலான உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும் – இந்திய தூதுவர்

இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்கள் இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உதவியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான பங்காளித்துவத்தை மாற்றுவதற்கான இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்காக நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இதனைத் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இரு நாடுகளுக்குமிடையில் கல்வி, திறன் பயிற்சி மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றில் ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்ய நம்புவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார்.