இந்தியாவின் முன்னணி தனி யார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண் டஸ்ட்ரீஸ், அமெரிக்கத் தடைக ளுக்கு இணங்க, அதன் ஏற்றுமதி சார்ந்த ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலை யத்திற்கு ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தியுள் ளது.
அக்டோபர் 22 அன்று “ரஷ்யாவின் எரிசக்தித் துறையின் மீது அழுத்தத்தை அதிகரிக்கவும், கிரெம்ளினின் அதன் போர் இயந்தி ரத்திற்கான வருவாயை திரட்டும் திறனைக் குறைக்க வும்” அமெரிக்கா தடைகளை அறிவித்தது, இது ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயிலுடனான ஒப்பந்தங்களை நிறுவனங்கள் நிறுத்த நவம்பர் 21 ஆம் தேதி வரை காலக்கெடுவை நிர்ணயித்தது.
அக்டோபர் 22 ஆம் தேதி நிலவரப்படி ரஷ்ய கச்சா எண்ணெயை முன்கூட்டியே எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்படுவதாகஎன்று ரிலையன்ஸ் வியாழக்கிழமை(20) தெரி வித்துள்ளது. ரிலையன்ஸ் தற்போது ரஷ்ய எண்ணெயை வாங்கவில்லை என்றும்இ மீண்டும் அவ்வாறு செய்யுமா என்பது குறித்து இன்னும் ஒரு கருத்தை எடுக்கவில்லை என்றும் ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தடைகளை அறிவிப்பதற்கு முன்பு வாங்கப்பட்ட எண்ணெய், உள்நாட்டு சந்தைக்கு வழங்கும் ஜாம்நகர் வசதியின் ஒரு பகுதியில் செயலாக்கப்படும். நவம்பர் 20 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு வரும் சரக்குகள் உள்நாட்டு சுங்க வரிப் பகுதியில் பெறப்பட்டு செயலாக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுத்திகரிப்பு நிலையத்தின் ஏற்றுமதி சார்ந்த பகுதி அதன் ஒரு நாளைக்கு 1.4 மில்லியன் பீப்பாய்கள் கொள்ளளவில் பாதியைக் கொண்டுள்ளது.இந்த நடவடிக்கை ரஷ்ய கச்சா எண் ணெய் மீதான புதிய தடைகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமுலுக்கு வரும் வரை ஐரோ ப்பா விற்கு தளம் தொடர்ந்து விநியோகிக்க முடியும் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.



