இந்தியா இலங்கை இடையே 2 பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன: இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

366 Views

இந்தியா இலங்கை இடையே 2 பாதுகாப்பு ஒப்பந்தங்கள்

மார்ச் 16 அன்று இந்தியா இலங்கை இடையே 2 பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கேணல் நளின் ஹேரத் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கை அரசு, இந்திய அரசுடன் கையெழுத்திடப்பட்ட கடல்சார் உடன்படிக்கைகள் இலங்கையில் தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித இடையூற்றையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்திய அரசாங்கத்திடம் இருந்து மிதக்கும் கப்பல்துறை மற்றும் டோர்னியர் உளவு விமானத்தை இலங்கை அரசு இலவசமாக வாங்கியதையும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இதுவரை இத்தகைய உடன்படிக்கைகளைப் பற்றி இந்திய அரசு வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply