மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்ற நிலை காரணமாக சந்தையிலிருந்து தினமும் 20 மில்லியன் பீப்பாய்களின் மசகு எண்ணெய் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக உலகளாவிய  ரீதியிலான மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 100 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

சர்வதேச சந்தை அளவீடான பிரெண்ட் மசகு எண்ணெய் (Brent crude) விலை, ஆசிய பசிபிக் சந்தைகளில் புதிய வார வர்த்தகம் தொடங்கியதும் 12.2 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாயின் விலை  104.05 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.