பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகைபிடித்தல் பழக்கமானது அதிகரித்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய்களுக்கான நிபுணர் வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
14 அல்லது 15 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் பலர் சிகரெட்டுகளைப் பரிசோதித்துப் பார்க்க முனைகின்றனர். இந்த புகைபிடித்தல் பழக்கமானது நுரையீரல் தொடர்பான நோய்களின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிக்கும் என மேலும் தெரிவித்தார்.


