முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது சட்டவிரோதமானது என்றும், அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் ஊழல் தடுப்பு அமைப்புக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு கேள்விகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது.
மேலும் இம்ரான் கானை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு செல்லுமாறும், உயர்நீதிமன்றம் எந்த முடிவை எடுத்தாலும் அதை அவர் ஏற்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இன்றைய வழக்கு விசாரணையையொட்டி உச்ச நீதிமன்றத்தில் இம்ரான் கான் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அவர் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளார்.