வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு புலம்பெயர்ந்துள்ளவர்கள் உதவ வேண்டும்-சுவிஸ் உதயம் அமைப்பு கோரிக்கை

புலம்பெயர்ந்துள்ளவர்கள் உதவ வேண்டும்

புவறுமை நிலையில் உள்ளவர்களுக்கு புலம்பெயர்ந்துள்ளவர்கள் உதவ வேண்டும். வறுமை நிலையில் உள்ளவர்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுக்க முன்வர வேண்டும் என சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளரும் தொழிலதிபருமான க.துரைநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் சமூகசேவகர் தொழிலதிபர் க.துரைநாயகம் அவர்களின் சொந்த நிதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மிகவும் வறிய நிலையில் வாழ்ந்த குடும்பம் ஒன்றுக்கு 08 இலட்சம் பெறுமதியில் வீடு ஒன்றினை அமைத்து அதனை கையளிக்கும் நிகழ்வு  நடைபெற்றது.

IMG 0015 வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு புலம்பெயர்ந்துள்ளவர்கள் உதவ வேண்டும்-சுவிஸ் உதயம் அமைப்பு கோரிக்கை

சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் ஓய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு. விமலநாதன் தலைமையில்   ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந் நிகழ்வில், செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியன்குளம் பகுதியில் சிறிய குடிசையில் எந்த அடிப்படை வசதியும் அற்ற நிலையில் யானையின் தாக்குதல்கள் மத்தியில் வாழ்ந்துவந்த குடும்பம் ஒன்றுக்கு    வீடு ஒன்று கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்தே புலம்பெயர்ந்துள்ளவர்கள் முடிந்தளவு வறுமை நிலையில் உள்ளவர்களுக்கான வீடுகளைஅமைத்துக்கொடுக்கமுன்வரவேண்டும் என சுவிஸ் உதயம் அமைப்பு வேண்டுகோள்விடுத்துள்ளார்.

Tamil News